புதுடெல்லி: உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத்தொகை, காப்பீட்டு வருமானம், ஈவுத்தொகை மற்றும் பிற சொத்துகள் ஆகியவற்றை மக்கள் திரும்ப பெற உதவும் நோக்கத்தில் உங்கள் பணம், உங்கள் உரிமை என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் உங்கள் பணம், உங்கள் உரிமை இயக்கத்தில் பங்கேற்று பயன் பெறுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் தளத்தில், “உங்கள் பணம், உங்கள் உரிமை என்ற பிரசாரம் கடந்த இரண்டு மாதங்களில் உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உண்மையான உரிமையாளர்களுக்கு வெற்றிகரமாக திருப்பி தந்துள்ளது. அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் இது சாத்தியமாகி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
