உயிருக்கு போராடிய 2 வயது குழந்தையுடன் தஞ்சையில் இருந்து கோவைக்கு 3 மணி நேரத்தில் வந்த ஆம்புலன்ஸ்

கோவை, ஜன. 12: உயிருக்கு போராடிய 2 வயது குழந்தையுடன் தஞ்சையில் இருந்து கோவைக்கு 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 வயது குழந்தையின் உடல் நிலை நேற்று மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து, அந்த குழந்தையை சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர் குழுவினர் கூறினர். இதையடுத்து, அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் கோவை விமான நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, தனியார் ஆம்புலன்ஸ் தயார் ெசய்யப்பட்டு, நேற்று தஞ்சையில் இருந்து கோவையை நோக்கி புறப்பட்டது. வழிெநடுக உள்ள போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வாட்ஸ் அப் குழு மூலம், வழிெநடுக உள்ள அனைத்து மாவட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு குழந்தையை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டது. வழிெநடுக மின்னல் வேகத்தில் பாய்ந்த ஆம்புலன்ஸ், காலை 8:30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தது. உடனடியாக விமானத்தில் அந்த குழந்தை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 268.60 கி.மீ. தூரம் உள்ள தஞ்சை-கோவை சாலையை கடக்க 5.20 மணி ேநரம் ஆகும். ஆனால், ஆம்புலன்ஸ் டிரைவர், 3 மணி நேரத்தில் கோவைக்கு கொண்டு வந்து சேர்த்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் மற்றும் பொதுமக்கள் ெவகுவாக பாராட்டினர்.

Related Stories:

>