ஜூனியர் உலக ஹாக்கி பிரான்ஸ் கோல் வேட்டை: சரியாக ஆடாமல் தோற்ற கொரியா

சென்னை: சென்னையில் நேற்று நடந்த உலகக்கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில், கொரியா அணிக்கு எதிராக 11 கோல்கள் போட்டு, பிரான்ஸ் அணி அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. உலகக்கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டிகள், சென்னை, மதுரை நகரங்களில் நடந்து வருகின்றன. சென்னையில் நேற்று நடந்த ஒரு போட்டியில், எப் – பிரிவில் பிரான்ஸ் – கொரியா அணிகள் மோதின.

துவக்கம் முதல் அட்டகாசமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் வீரர்கள் 11 கோல்கள் போட்டு, கொரியாவை திக்குமுக்காடச் செய்தனர். கொரியா அணியால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. அதனால், 11-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி வாகை சூடியது. எப் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் வங்கதேச அணியை, ஆஸ்திரேலியா 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மதுரையில் நேற்று நடந்த போட்டிகளில், நெதர்லாந்து, ரஷ்யா, மலேசியா, ஜெர்மனி அணிகள் வெற்றிவாகை சூடின.

Related Stories: