பழைய காதலனிடம் ரூ.7 லட்சம் பணம் கேட்ட இளம்பெண் போலீசார் விசாரணை வேலூர் அருகே சமரசத்துடன் பிரிந்தபிறகு

வேலூர், நவ.21: சமரசத்துடன் பிரிந்தபிறகு பழைய காதலனிடம் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தோனி இளவரசன்(39) இசைக்கலைஞர். இவர் கடந்த 2008ம் ஆண்டு வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில், படித்தபோது, பாகாயம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் அவர்கள் நெருங்கி பழகியதில் அந்த பெண் கர்ப்பமானதாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இருவரும் சமரசத்துடன் பிரிந்து சென்றனர். அப்பெண்ணின் கருவும் கலைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தோனி இளவரசன் வேறு பெண்ணை சில ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த அந்த பெண், தோனி இளவரசனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அவரும் அவ்வப்போது பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ரூ.7 லட்சம் கேட்டு அந்தப் பெண் மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த இளவரசன் பாகாயம் போலீசில் நேற்று முன்தினம் இளம்பெண் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: