நெற்பயிர்கள் மழையால் சேதம் நஷ்டஈடு வழங்க வேண்டும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கரூர், ஜன. 5: குளித்தலை தாலுகாவில் நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளது. இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் வழங்கப்பட்டுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:குளித்தலை தாலுகா மேலசுக்காம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாய சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் நெற்பயிர் சாகுபடி செய்து வந்தோம். விவசாயிகளால் பயிரிடப்பட்ட அனைத்து நிலங்களிலும் உள்ள பயிர்கள், பெய்த மழையால் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்து, நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

இதனை வேளாண்துறையை சேர்ந்த ஆய்வுக்குழு வந்து பார்வையிட்டுள்ளதால், எங்கள் சேதத்தையும், நஷ்டத்தையும் கருத்தில் கொண்டு தகுந்த நஷ்டஈடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: