பென்னாகரம் அருகே சிமெண்ட் சாலை பணிகளை இன்பசேகரன் எம்எல்ஏ ஆய்வு

பென்னாகரம், டிச.26:  பென்னாகரம் அருகே ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மஞ்சாரஅள்ளி ஊராட்சி சித்திரப்பட்டி கிராமத்தில், தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ பார்வையிட்டு, ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஏரியூர் ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ், ஒன்றிய அவைத்தலைவர் சௌந்தர்ராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள் சம்பத்குமார், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சென்னையன், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: