உலக தடகளத்தில் தங்கம்: பொது விடுமுறை அறிவித்த போட்ஸ்வானா

 

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4×400மீ தொடர் ஓட்ட போட்டியில் ஆப்பிரிக்க நாடானா போட்ஸ்வானா தங்கப்பதக்கம் வென்றது. 4×400மீ பந்தயத்தில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிரிக்க நாடு தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். இந்த வரலாற்று வெற்றியை கொண்டாட அந்நாட்டு அதிபர் டுமா போகா செப்டம்பர் 29ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவித்துள்ளார். இதனால் அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் தங்கள் அணியினரை வரவேற்க உற்சாகமாக காத்திருக்கின்றனர்

Related Stories: