10 ஆண்டுக்கு பின் நிரம்பிய தென்கரைக்கோட்டை ஏரி

கடத்தூர், டிச.21:கடத்தூர் ஒன்றியம், தென்கரைக்கோட்டையில் 60 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. ஏரிக்கு கடந்த 10ஆண்டுகளாக போதிய நீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்நிலையில், ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால், வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டியது. அதிலிருந்து வெளியேறும் உபரிநீரால், தென்கரைக்கோட்டை ஏரி 10ஆண்டிற்கு பிறகு முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல், அரூர் அருகே எல்லப்புடையாம்பட்டியில் அமைந்துள்ள மணவாளன்சாமி ஏரிக்கு தொடர் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து, ஐந்து ஆண்டிற்கு பின்னர் மணவாளன்சாமி ஏரி நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள், ஏரி கரையோரம் கிடா வெட்டி வழிபாடு நடத்தினர்.

Related Stories: