நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிய மரம்: வேறு இடத்தில் நட ஏற்பாடு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 நுழைவாயில்களில் ஒன்றான கஜ் துவாரை பிரதமர் மோடி அடிக்கடி பயன்படுத்துவது வழக்கம். கஜ் துவார் வாயிலில் எண்-1 என குறியிடப்பட்ட ஒற்றை மரம் மட்டும் நன்கு வளர்ந்துள்ளது. 7 ஆண்டுகள் வளர்ந்த இந்த மரத்தால் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என பிரதமரின் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) கவலை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து எண்-1 மரத்தை அங்கிருந்து அகற்ற டெல்லி வனத்துறையிடம் பொதுப்பணித் துறை அனுமதி கேட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்ததும், மரம் வேரோடு பிடுங்கப்பட்டு பிரேர்ண ஸ்தலம் பகுதியில் மீண்டும் நடப்பட உள்ளது.

Related Stories: