ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜேஇஐ அமைப்புடன் இணைக்கப்பட்ட 215 பள்ளிகளை அரசு கையகப்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பை அரசு தடை செய்துள்ளது. இந்த அமைப்புடன் இணைக்கப்பட்ட 215 பள்ளிகளை அதில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக கையகப்படுத்துவதற்கு பள்ளிக்கல்வி துறை நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் 10 மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி உடன் இணைக்கப்பட்ட பள்ளிகளை காவல்துறையினருடன் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழு நேற்று நேரில் சென்று பார்வையிட்டது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழு பள்ளிகளை பொறுப்ேபற்றுக்கொண்டது. தொடர்ந்து அவற்றின் ஆவணங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள ஊழியர்களிடமும் குழுவினர் கலந்துரையாடினார்கள்.
பள்ளிமாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவிக்காமல் முழு செயல்முறையும் அமைதியாகவும் சுமூகமாகவும் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒன்றிய பா.ஜ அரசின் ஊதுகுழலாக உமர் அரசு செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
