கோவா அமைச்சரவை விஸ்தரிப்பு மாஜி முதல்வர் அமைச்சராக பதவியேற்றார்

பனாஜி: கோவா அமைச்சரவை நேற்று விஸ்தரிக்கப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உட்பட 2 பேர் அமைச்சர்ளாக பதவியேற்றனர். கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இதில் அமைச்சராக இருந்த அலிக்ஸோ செக்வேரா நேற்றுமுன்தினம் திடீரென ராஜினாமா செய்தார்.

ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் சமர்ப்பித்த அலிக்ஸோ செக்வேரா தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதாக கூறினார். இந் நிலையில் அமைச்சரவை நேற்று விஸ்தரிக்கப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், ரமேஷ் தவாட்கர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ரமேஷ் தவாட்கர் சட்டபேரவை சபாநாயகராக இருந்தார். திகம்பர் காமத் காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2007 முதல் 2012 வரை முதல்வராக இருந்தார்.

Related Stories: