கடத்தூர் பஸ் ஸ்டாண்டில், ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம்

கடத்தூர்: கடத்தூர் பஸ் ஸ்டாண்டில், ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் திமுக எம்பி தாமரைச்செல்வன் கலந்து கொண்டார். இதில் வக்கீல் முனிராஜ், குபேந்திரன், மணி, மாரிமுத்து, மோகன், பாலைய்யா, சிவன், முருகன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பாலக்கோடு: பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குட்டி, வெங்கடாஜலம், மாதேஷ், அமிர்ஜான், ரவி, கம்யூனிஸ்ட் நக்கீரன், சந்திரசேகர், மதிமுக குமரவேல், நவாப் ஆகியோர் கலந்து கொண்டனர். மாரண்டஅள்ளியில், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முருகன், ராஜேஸ்வரி மணிவண்ணன், வெங்கடேசன், விஸ்வநாதன், கார்த்திகேயன், முத்துராஜ், ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.காரிமங்கலம் : காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, வெள்ளிச்சந்தை, ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, பிக்கனஅள்ளி ஆகிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

 திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால், பழனிமுத்து, ஹரிபிரசாத், கோவிந்தன் உள்பட பலர் ஊர்வலமாக சென்று, முழு அடைப்பிற்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டனர்.

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த போராட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் தேசிங்குராஜன், சண்முகநிதி, நகர செயலாளர் முல்லைசெழியன், சந்திரமோகன், வேடம்மாள், கிருஷ்ணகுமார், ராஜேந்திரன், திருமால்செல்வன், சென்னகிருஷ்ணன், மருத்துவர் சுரேஷ்குமார், விசிக ராமச்சந்திரன், செந்தில்முருகன், குமார், மலிகா, தமிழ்குமரன், காங்கிரஸ் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் தலைமையில் நடந்த போராட்டத்தில், வெங்கடேசன், கமலக்கண்ணன், அன்பழகன், பேகம் சின்னதம்பி, லோகேஷ், இக்பால், முனிராஜ், முனிரத்தினம், விசிக கலையரசன், காங்கிரஸ் பொன்பிரகாஷ், கம்யூனிஸ்ட் சிசுபாலன், மதிமுக சிவபிரகாசம், கொங்கு செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். கம்பைநல்லூர் பஸ் ஸ்டாண்டில், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: