காதர் மொகிதீனுக்கு தகைசால் விருது மட்டற்ற மகிழ்ச்சி முதல்வர் எக்ஸ்தள பதிவு

சென்னை: பேராசிரியர் காதர் மொகிதீன் தகைசால் தமிழர் விருதினை வழங்கிய பின் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: மாணவர்களுக்கும் ஆசிரியர், மணிச்சுடர் இதழுக்கும் ஆசிரியர், சமூகத்துக்கும் நல்வழி காட்டிடும் ஆசிரியர் என விளங்கி வரும் மாண்பாளர் பேராசிரியர் காதர் மொகிதீன்.

மனிதநேயப் பணிகளுக்கும் மதநல்லிணக்கத்துக்கும் தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவருக்கு இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை திராவிட மாடல் அரசின் சார்பில் விடுதலை நாள் விழாவில் வழங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

Related Stories: