ஆண்டிமடம் ஆட்டோ சங்க பேரவை கூட்டம்

ஜெயங்கொண்டம், ஆக.14: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் பேரவை கூட்டம் பிரபுகுமார் தலைமையில் நடைபெற்றது. சங்கம் சம்மந்தமாக சிஐடியூ மாவட்ட செயலாளர் துரைசாமி விளக்கி பேசினார். ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் சத்தியமூர்த்தி, சிபிஎம் செயற்குழு உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் சங்க தலைவராக பிரபுகுமார், செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக ஆரோக்கியசாமி, துணை தலைவராக கலையரசன், துணை செயலாளராக மணிவண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டிமடம் பகுதியில் ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோ ஓட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் ஆன்லைனில் ஆட்டோ ஓட்டுனர் மீது அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கர், உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: