டிஎன்எஸ்டிசி கும்பகோணம் சார்பில் நவக்கிரக சுற்றுலாவுக்கு புதிய பேருந்து சேவை எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கும்பகோணம், டிச.18: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் நவக்கிரக சுற்றுலாவிற்கு புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆன்மீக பயணிகள் ஒரே நாளில் அனைத்து நவகிரக கோவிலையும் தரிசிக்கும் வகையில் இயக்கப்பட்டு வரும் கும்பகோணம் நவகிரக சுற்றுலா விரைவு பேருந்துக்கு புதிய BS6 பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான சாக்கோட்டை அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் மாநகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் உள்ளூர் கணேசன், சுதாகர் மாவட்ட பிரதிநிதி கரிகாலன், கும்பகோணம் மண்டல துணை மேலாளர் (வணிகம்) தங்கபாண்டியன், உதவி மேலாளர் ராஜ்மோகன், உதவி பொறியாளர் ராஜா, கும்பகோணம்-2 கிளை மேலாளர் திருஞானம் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: