நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை, டிச.18: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் கிராமங்கள் சூழ்ந்த அழகிய பகுதியாகும்.

இங்கு எந்ததொரு ஆற்றுநீர் பாசனம் இல்லாதாதல் இயற்கை மழையை கொண்டு ஆழ்துளை கிணற்றில் மூலம் நெல், கருப்பு, மக்காச்சோளம், கரும்பு, எனவும் காய்கறிகாளான வெண்டைகாய், கத்திரிகாய்,புடலைக் காய், போன்றவையும் கீரை வகையும் பயிர்செய்து வருகிறார்கள். இப்பகுதியில் நெல் சாகுபடி என்பது குறுவை, சாம்பா என்பது மாறி ஆழ்துளை கிணற்றிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விலையில்லா மின்சாரம் வழங்குவதாலும் விவசாயிகளுக்கு நெல்க்கு கூடுதல் விலை கொடுப்பதலும் விளைந்த நெல்களை தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் முலம் கொள்முதல் செய்து அதற்கு உரிய தொகையை அவரவர் வாங்கி கணக்கில் செலுத்துவதால் நெல் சாகுபடி செய்ய விரும்புகிறார்கள்.

தற்சமயம் தை மாதம் சம்பா நெல் அறுவடைக்கு தயார் நிலையில் விவசாயிகள் உள்ள நிலையில் உடனடியாக தமிழக அரசு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கந்தர்வகோட்டை நகரில் திறப்பதற்கு இடவசதி உள்ளதால் திறக்க வேண்டும் என சம்பந்தபட்ட துறைக்கு கந்தர்வகோட்டை ஊராட்சியில் அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

Related Stories: