கரம்பயத்தில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

பட்டுக்கோட்டை, டிச.18: பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் மீனாட்சி சந்திரசேகரன் மகளிர் கல்லூரியில் இன்று தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துத்துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில் இருதய நோய் பரிசோதனை, இசிஜி, பிபி பரிசோதனை, இருதய எக்கோ பரிசோதனை, பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, தொற்றா நோய் சிகிச்சை பிரிவு, சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, எலும்பு மூட்டு பிரிவு உள்ளிட்ட 27 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மேலும் இலவச பரிசோதனைகளும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு பதிவு செய்து தரப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பரிசோதனைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. இந்த மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும், தலைசிறந்த நிபுணர்களால் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அனைத்து பொதுமக்களும் மேற்கண்ட முகாமில் கலந்து கொண்டு பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.

Related Stories: