நாகப்பட்டினம், டிச.18: பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் மீது ரகசியம் காக்கப்படும் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் நாகை எஸ்பி செல்வகுமார் பொதுமக்களிடம் தெரிவித்தார். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கூட்டம் கூட்டம் நடைபெற்று வருவதுபோல், நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒவ்வொரு புதன்கிழமை அன்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்து எஸ்பியிடம் புகார் மனுக்கள் அளித்து தீர்வு பெற்று வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) செல்வகுமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் 16 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி உறுதி அளித்தார். மேலும் பொது மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க் முகாம் நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார் மீது ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சம் இன்றி மனுக்கள் அளிக்கலாம் என்று எஸ்பி செல்வகுமார் தெரிவித்தார்.
