தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்கு சிறப்பு ரயில் சேவை

திருச்சி, டிச. 18: கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:
வண்டி எண் 06166 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் டிசம்பர் 28ம் தேதி மற்றும் ஜனவரி 4ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

மறு மார்க்கமாக வண்டி எண் 06165 தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5ம் தேதி தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் மூன்று ஏசி வகுப்புகள் ஒன்பது படுக்கை வசதிகள் கொண்ட வகுப்புகள் நான்கு பொது 2ம் வகுப்பு மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளிகள் வகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் செல்லும் வழித்தடங்களின் விவரம் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம். மருமார்க்கமாக இதே வழியாக செல்லும் இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று (18ம் தேதி) துவங்க உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: