ம.பி. வங்கியில் ரூ.14 கோடி மதிப்பு தங்கம் கொள்ளை: 18 நிமிடத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

ஜபல்பூர்: மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.14 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தின் செஹோர் தாலுகாவில் தனியாருக்கு சொந்தமான சிறு நிதி வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை, முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வங்கிக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்களை மிரட்டி, சுமார் 20 நிமிடங்களுக்குள் ரூ.14 கோடி மதிப்பிலான 14.8 தங்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜபல்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூர்யகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஹெல்மெட் அணிந்து, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் வங்கிக்குள் சென்றனர். அப்போது அங்கே பாதுகாவலர் யாருமில்லை. ஆறு ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். காலை 8.50 மணிக்கு வங்கியில் சென்ற மர்ம நபர்கள் 9.08 மணிக்கு வௌியே வந்துள்ளனர். 18 நிமிடங்களிலேயே தங்கம், ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறோம்” என்றார்.

Related Stories: