7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு வாய்பேச முடியாத, காது கேளாதோர் நல சங்க மாவட்ட செயலாளர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். இதில் காதுகேளாதோர், வாய் பேச முடியாதோருக்கு புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அனைத்து மாவட்டத்திலும் ஒரு ஊழியரை பணியமர்த்த வேண்டும், மாநிலம் முழுவதும் தொகுப்பு ஊதியத்தின் கீழ் பணியாற்றி வரும் வாய்பேச முடியாத மற்றும் காது கோளதோர் மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் 151ன்படி உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசு பணிகளில், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும். தனியார்துறை நிறுவனங்களில் வாய்பேச முடியாத, காதுகேளாதோர் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் காதுகளாதோர் வாய் பேச முடியாதோர் நல சங்கம் சார்பில், 50க்கும் மேற்பட்டோர் தரையில் உருண்டு, புரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: