உத்திரமேரூர் – மதுராந்தகம் இடையே அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க கிரமமக்கள் கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் – மதுராந்தகம் இடையே கிராமங்கள் வழியாக மீண்டும் அரசு பேருந்து களை இயக்க வேண்டும் என்று கிராம கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் மதுராந்தகம் சாலையில் பல்வேறு கிராமப்புறங்கள் வழியாக அரசு பேருந்து தடம் எண் 89V மற்றும் தடம் எண் 77A என்ற இரண்டு அரசு பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இந்த இரண்டு பேருந்துகளும் பாதிரி, கீழாமூர், கிலியாநகர், எல்.எண்டத்தூர், ஆலப்பாக்கம், பாரதிநகர், கடம்பூர், தீட்டாளம், கோழியாளம், நெல்லி, பழத்தோட்டம், கம்மாளம்பூண்டி, காவனூர் புதுச்சேரி, காரியமங்கலம், மணிதோட்டம், குப்பையநல்லூர், பட்டஞ்சேரி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக இயக்கப்பட்டு வந்தன. இந்த, பேருந்துகள் சில மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால், கிராமங்களில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ – மாணவிகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட பேருந்தினை மீண்டும் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உத்திரமேரூர் – மதுராந்தகம் இடையே அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க கிரமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: