செங்கல்பட்டு மாவட்ட அளவிலான செயல் குழு, முதியோர் நல குழு உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் ‘ஒருங்கிணைந்த சேவை மையம் திட்டங்களுக்கான மாவட்ட அளவிலான செயல்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அளவிலான முதியோர் நல குழு உறுப்பினர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. குடும்பம், பணிபுரியும் இடம், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் வன்முறைக்கு உள்ளாகும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களிடமிருந்து பெறப்படும் குறை களைவு மனுக்களை விரைந்து தீர்வு செய்ய ஒவ்வொரு வருவாய் கோட்டத்தில் சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியரை தலைவராக கொண்ட உட்கோட்ட தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மற்றும் இதர சேவைகள் தடையின்றி கிடைக்க பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான முதியோர் நலக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல சட்டம் 2007ன் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை மேற்படி சட்டத்தின்படி பரிசீலனை செய்து இரண்டு மாத காலத்திற்குள் அம்மனுக்கள் மீது உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்பது உள்ளிட்ட முக்கிய கரு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post செங்கல்பட்டு மாவட்ட அளவிலான செயல் குழு, முதியோர் நல குழு உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: