வெங்காயம் விலை குறைந்தும் ஓட்டல்களில் ஆம்லெட் விலை குறையாத மர்மம்

கரூர், ஜன. 29: வெங்காயம் விலை குறைந்தும் ஆம்லெட் விலை குறையவில்லை. கரூர் மாவட்டம் ஈசநத்தம் பகுதியில் நந்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. சின்ன வெங்காயத்தை வாரச் சந்தைகள், மற்றும் வேன்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்தும் வரத்து அதிகமாக உள்ளது. சின்ன வெங்காயத்திற்கு போதுமான கொள்முதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கரூரில் பல இடங்களிலும் வேன்களில் வைத்து விற்பனை செய்கின்றனர்.

பல்லாரி வெங்காயத்தின் விலை கடந்த சிலநாட்களாக ஏறுமுகத்தில் இருந்ததால் கிலோ ரூ.100 வரை விற்பனையானது. தற்போது வெங்காயம் விலை குறைந்து வருகிறது. உழவர்சந்தைகளில் கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைகளில் ரூ.65 வரை விற்கின்றனர். எனினும் வெங்காயம் விலை உயர்ந்தபோது அதிகரிக்கப்பட்ட ஆம்லெட் விலை இன்னமும் குறையவில்லை, ரூ.15 ஆக இருந்த ஆம்லெட் விலையை ரூ.20 ஆக உயர்த்தினர். வெங்காயம் விலை தற்போது குறைந்து வருவதையடுத்து ஆம்லெட் விலை குறையவில்லை. ஆம்லெட் விலையை முன்பிருந்ததுபோல ரூ.15 ஆக குறைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: