60 வயதை கடந்த கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

தர்மபுரி, டிச.4: 60 வயதை கடந்த கட்டட தொழிலாளர்களுக்கு, மாத ஓய்வூதியம் ₹6ஆயிரம் வழங்க வேண்டுமென தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு  கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் குழந்தைவேல் தலைமையில் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விஜயா, முனுசாமி, மணி உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 60 வயதை கடந்த கட்டட தொழிலாளர்களுக்கு, மாத ஓய்வூதியம் ₹6ஆயிரம் வழங்க வேண்டும். திருமண உதவி தொகையாக ₹1 லட்சம் வழங்க வேண்டும். ஈமச்சடங்கிற்கு ₹50 ஆயிரம் வழங்க வேண்டும். 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவி வழங்க வேண்டும். விபத்தில் மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வீடு இல்லாத தொழிலாளர்கள் அனைவருக்கும், வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனவரி 20ம் தேதி தர்மபுரியில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி பேரணி, பொதுக்கூட்டம், ரத்த தான முகாம் நடக்கிறது. இம்முகாமில் இச்சங்கத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: