தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்

தர்மபுரி, மார்ச் 15: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:  நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் எங்கும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் ஆளும் கட்சியின் கார்கள் தாராளமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. முறையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படவில்லை. உடனடியாக ஆங்காங்கே செக்போஸ்ட் அமைத்து, கார்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். எல்ஐசி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பிரதமர் படம் அகற்றப்படவில்லை. பேருந்து நிலையங்களில் அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் அழிக்கப்படவில்லை. கொடிக்கம்பங்களின் பீடங்கள் மறைக்கப்படவில்லை. அரசியல் பாகுபாடின்றி தேர்தலை ஜனநாயக பூர்வமாக நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: