துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

தர்மபுரி, மார்ச் 14: தர்மபுரி மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாடாளுமன்ற பொதுத்தேர்தல், அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளவும், எடுத்துச் செல்வதற்கும் தடையாணை அமலுக்கு வந்துள்ளது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் தங்களது துப்பாக்கிகளை, உடனடியாக தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின், துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: