உடையாம்பாளையம் பகுதியில் தார் சாலைக்குள் புதைந்த லாரி

கோவை, மார்ச் 11: தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார் சாலையால் உடையாம்பாளையம் பகுதியில் வாகனங்கள் சாலைக்குள் புதைவது தொடர்கதையாகி வருகிறது.கோவை சவுரிபாளையத்தை அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமின்றி அமைக்கப்பட்டதாகவும், சாலை அமைத்த சில நாட்களிலேயே அதில் குழிகள் ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் உடையாம்பாளையத்தில் தனியார் மருத்துவமனை அருகே மணல் லோடு ஏற்றி வந்த லாரியின் சக்கரம் தார் சாலைக்குள் சுமார் ஒரு அடி ஆழம் வரை புதைந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் வாகனங்கள் சாலையில் புதைவது வழக்கமாகி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போல் லாரி ஒன்றின் சக்கரம் தார் சாலைக்குள் புதைந்தது. அதனை பொக்லைன் உதவியுடன் வெளியே எடுத்தனர். தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. தரமற்ற தார் சாலைகளால் இது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது

Related Stories: