போலீஸ் ஸ்டேஷன்களில் சோலார் திட்டம் முடக்கம்

கோவை, பிப்.14: கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன், சரவணம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், கருமத்தம்பட்டி, உடுமலை, பொள்ளாச்சி தாலூகா, ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர், பங்களாபுதூர், திருப்பூர் நல்லூர், தெற்கு, பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்களில் 43.50 லட்ச ரூபாய் செலவில் சோலார் பேனல் அமைத்து மின்சார வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 140 போலீஸ் ஸ்டேஷன்களில் சோலார் பேனல் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.

 மாநில அளவில் அரசு அலுவலகங்கள், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்கள், அரசு கல்லூரிகளில் சோலார் மின்சார திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சி போலீஸ் ஸ்டேஷன்களில் சோலார் பேனல் திட்டம் நடைமுறைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திட்ட மதிப்பீடு தயாரித்தும், சோலார் பேனல் திட்டம் பயன்பாட்டிற்கு வரவில்லை. சில போலீஸ் ஸ்டேஷன்கள் இடம்  மாற்றப்பட்டது. புதிய கட்டடத்திற்கு மாறியும் இடவசதி குறைவாக இருப்பதால் சோலார் பேனல் திட்டம் முழுமையாக பயன்தராது என கருதி இந்த திட்டத்தை போலீஸ் அதிகாரிகள் கைவிட்டு விட்டதாக தெரிகிறது.

Related Stories: