மாநில பூப்பந்து போட்டி கோவையில் 20 பேர் தேர்வு

கோவை, பிப்.13:காஞ்சிபுரத்தில் நாளை மறுநாள் துவங்கும் மாநில அளவிலான பூப்பந்து போட்டிற்கு கோவை மாவட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 20 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை மறுநாள் (15ம் தேதி) காஞ்சிபுரத்தில் துவங்குகிறது. வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. இதில் 21 வயதிற்குட்பட்ட ஆண், பெண் பூப்பந்து போட்டி நடக்கிறது. அதில் பங்கேற்க தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவையில் நடந்தது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 10 பேரும், மாணவிகள் 10 பேரும் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு நேரு ஸ்டேடியம் அருகேயுள்ள மைதானத்தில் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் 32 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் 320 பேரும், பெண்கள் 320 பேரும் என 640 பேர் பங்கேற்கின்றனர். இதில் முதலிடம் பெற்று வெற்றி பெறும் ஆண், பெண் தனிநபர்கள் 10 பேருக்கு தலா ரூ.ஒரு லட்சமும், இரண்டாமிடம் பெரும்  10 பேருக்கு தலா ரூ.75 ஆயிரமும், 3ம் இடம் பெறும் 10 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

Related Stories: