அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரூர், ஜன.10: அரூரில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், அரூர் ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தலைவர் உண்ணாமலை தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் பழனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது, அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் ஓய்வூதியம் மாதம் ₹3 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை அரூரில் தொடங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை ₹500லிருந்து ₹1500ஆக உயர்த்த வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டியில் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர்கள் சரவணன், மணிமேகலை, சின்னப்பாப்பா, நிர்மலா, தனம், பெருமாள், ராமன், தீர்த்தான், உமாராணி, நித்யா, ராமன், பழனிசாமி, முருகேசன், அண்ணாமலை, ராஜாமணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: