அரூர் அருகே பலாத்காரத்தால் உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ₹5லட்சம் நிதியுதவி

அரூர், நவ.14: அரூர் அருகே சிட்லிங்கில் பலாத்காரத்தால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு, அமைச்சர் கே.பி.அன்பழகன் ₹5லட்சம் நிதியுதவி வழங்கினார். அரூர் தாலுகா சிட்லிங் கிராமத்தில் பலாத்காரத்தால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாணவியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தர்மபுரி மாவட்ட, ஒன்றிய, நகர அதிமுக சார்பில், ₹5 லட்சம் நிதியுதவியை மாணவியின் பெற்றோரிடம் வழங்கினார். அப்போது மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். பின்னர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்டு, சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பொறுப்பாளர்கள் அன்பழகன், பசுபதி, செண்பகம், சந்தோஷ், சம்பத்குமார், சிற்றரசு, பாஷா, பாண்டுரங்கன், சாமிகண்ணு, ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: