மாவட்ட திமுக உறுப்பினர்கள் கூட்டம்

தர்மபுரி, நவ.14: தர்மபுரி மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை(15ம் தேதி) நடக்கிறது.  இதுகுறித்து தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட திமுக சார்பில், மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (15ம் தேதி) காலை 10 மணிக்கு, டிஎன்சி விஜய் மஹாலில் அவைத்தலைவர் ஜிவி மாதையன் தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில், நாடாளுமன்ற, சட்டமன்ற இன்னாள், முன்னாள், உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: