பருவமழையை எதிர்நோக்கி தர்மபுரியில் மஞ்சள் சாகுபடி தீவிரம்

தர்மபுரி, நவ.8:  வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தர்மபுரி மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி தீவிரமடைந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் நெல் ஆகியவை முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. 1500 ஹெக்டேர் பரப்பளவிலும் நெல்லும், 2841 ஹெக்டேர் பரப்பில் கரும்பும், 5 ஆயிரம் ஹெக்டேரிலும் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.  தர்மபுரி ஒன்றியத்தில் வத்தல்மலை, அன்னசாகரம், மிட்டாரெட்டிஅள்ளி, தின்னஅள்ளி, முக்கல் நாயக்கன்பட்டி, சோலைகொட்டாய், லாலாகொட்டாய், வெள்ளோலை மற்றும் சோலைக் கொட்டாய், செட்டிக்கரை ஆகிய பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவ மழையை நம்பி மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இது பற்றி விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை தர்மபுரி ஒன்றியத்தில் குறைந்துள்ளது. இதனால், அந்த நேரத்தில் உழவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருந்தோம். தற்போது, ஆடிப்பட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து உள்ளோம். இந்த மழை கை கொடுத்தால், நடப்பாண்டில் அதிக மகசூல் கிடைக்கும்,’ என்றனர்.

Related Stories: