30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.17: 30அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், தர்மபுரியில் நேற்று 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் ரேஷன்கடை பணியாளர்கள் 30அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் பணியை புறக்கணித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சுகமதி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன்கடைகள் மூடப்பட்டிருந்தன. நகர்புற பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை பண்டகசாலை ரேஷன்கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. பல இடங்களில் ரேஷன்கடைகள் மூடப்பட்டிருந்ததால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுவிநியோகதிட்ட பொருட்களை விநியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதில் ரேஷன் கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: