இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

காரிமங்கலம், செப்.21: மாதம்பட்டி மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில், மத்திய அரசு சான்றிதழுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது.பாலக்கோடு அருகே மாதம்பட்டியில் இயங்கி வரும், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி மையமான, ‘மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியின் மூலம், மத்திய அரசின் இலவச பயிற்சி திட்டமான “பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா” திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மத்திய அரசு சான்றிதழுடன் “பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா” திட்டத்தின் கீழ் லேத் ஆப்ரேட்டர், இ கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், இ டி.வி ரிப்பேர் டெக்னீசியன் மற்றும் கம்ப்யூட்டர் பாகங்கள் பழுது நீக்குபவர், ஆகிய திறன் மேம்பாட்டு பயிற்சிவகுப்புகள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, இலவசமாக நடத்தப்பட உள்ளது.குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் சேர்ந்து பயனடையலாம். மேலும் 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு 2 ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் அனைவரும், இந்த பயிற்சியில் சேர்ந்து இலவசமாக பயிற்சி பெற்று, மத்திய அரசு சான்றிதழை பெறுவதன் மூலம், நல்ல தொரு வேலைவாய்ப்பை பெறலாம். பயிற்சியில் ஒரு பிரிவிற்கு 25 பேர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சேர்க்கை நடைபெற்று கொண்டிருப்பதால், உடனே கல்லூரி முதல்வரை அணுகலாம் என கல்லூரியின் தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

Related Stories: