கொசுவலை விற்பனை ஜோர்

தர்மபுரி, செப்.21: தர்மபுரி மாவட்டத்தில் கொசுவலை விற்பனை ஜோராக நடக்கிறது.தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் பாரதிபுரம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் கூடாரம் போன்ற, கொசுவலையை விற்பனை செய்தனர். ஒருவர் மட்டும் படுக்கும் கொசுவலை ₹900 மற்றும் 2 பேர் படுக்கும் கொசுவலை ₹1000 என விற்பனை செய்யப்பட்டது. இது தவிர பிறந்த குழந்தைகளுக்கு கொசுவலையுடன் கூடிய தொட்டில் ₹950க்கும், ஊஞ்சல், குளிக்கும் தொட்டிகளும் விற்பனை செய்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘நாங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தர்மபுரியில் தங்கி கொசுவலைகள் விற்பனை செய்து வருகிறோம். தற்போது மழைக்காலம் என்பதால், கொசுவலைகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 5 கொசுவலை விற்பனையாகிறது. கூடாரம் போன்று இருப்பதால், அதன் உள்ளே படுத்து கொள்வது எளிது. மேலும் கொசு வலைக்கு உள்ளே வராதவாறு அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றனர்.

Related Stories: