கோவை காந்திபுரம் மேம்பாலம் கூடுதலாக 440 மீட்டர் நீடிப்பு

கோவை, செப்.11: கோவை காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014ம் ஆண்டு துவங்கியது. முதல் அடுக்கு மேம்பால பணி கடந்த ஆண்டு முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 162 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் இரு மேம்பாலமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  முதல் மேம்பாலம் பல நாட்களாக போக்குவரத்திற்கு திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இரண்டாவது மேம்பாலம், மிகவும் உயரமாக வாகனங்கள் ஏற முடியாத அளவிற்கு இருப்பதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. முதல் மேம்பாலம் 1,752 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டது. இரண்டாவது மேம்பால பணி 1,226 மீட்டர் கட்ட திட்டமிடப்பட்டது. பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில், மேலும் 440 மீட்டர் தூரம் நீட்டிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

 தற்போது மேம்பாலம் 100 அடி ரோட்டில் 7வது வீதி சந்திப்பில் துவங்கி, சித்தாபுதூர் டி.சி.ஐ நிறுவனம் வரை முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டது, 8.50 மீட்டர் அகலத்தில் 38 தூண்களுடன் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. கூடுதலாக 440 மீட்டர் தூரம் வரை, அதாவது ஆவாரம்பாளையம் ரோடு சிக்னலை தாண்டி மேம்பாலம் முடியும் வகையில் திட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சிக்னல் தாண்டி மேம்பாலம் கட்டவேண்டும் என்றால் மேலும் 17 தூண்கள் அமைக்கவேண்டும். ெமாத்தமாக 55 தூண்கள் எழுப்பி ேமம்பாலம் கட்டவேண்டியுள்ளது. மேம்பால நீடிப்பிற்காக திட்ட மதிப்பீட்டில் 19 ேகாடி ரூபாய் ெசலவில் சில மாதம் முன் டெண்டர் விடப்பட்டது. இதில் பெரும்பாலான ஒப்பந்த நிறுவனங்கள் மொத்த திட்ட மதிப்பீட்டை காட்டிலும் 20 முதல் 40 சதவீத கூடுதல் தொகை கேட்டது. பகல் நேரத்தில் வேலை செய்ய முடியாது. இரவில் மட்டுமே பணி நடத்தவேண்டியுள்ளது.

 போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக ஒப்பந்த நிறுவனங்கள் புகார் தெரிவித்தது. மேம்பால பணியை தற்ேபாது செய்து வரும் நிறுவனமும் மேம்பால நீடிப்பு பணியை எடுக்க முன் வரவில்லை. தற்போது இரண்டாவது டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் இறுதி ெசய்யப்பட்டால் மட்டுமே இரண்டாவது மேம்பாலத்தை அடுத்த ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு ெகாண்டு வர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: