மீனம்

2.5.2024 முதல் 8.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் குரு மூன்றாம் இடத்தில் இருப்பதால் உங்கள் அச்சம் அகலும். இதுவரை இருந்த கிரக நிலைகளால் மனம் வாட்டம் பெற்றிருக்கும். அந்த வாட்டம் நீங்க தைரியம் பிறக்கும். அவர் பாக்கியஸ்தானத்தை வலுப்படுத்துவதால், உங்களுக்கு கிடைக்க வேண்டியது ஏதோ ஒரு வகையில் கிடைத்துவிடும். எனவே கவலை வேண்டாம். ஏழரைச்சனி இப்பொழுதுதான் துவங்கி இருப்பதால், அதைக் குறித்து பெரிய அளவில் வருந்த வேண்டியதில்லை.

கவனம் தேவை: பொதுவாகவே மீன ராசிக்காரர்களுக்கு இருக்கக் கூடிய கிரக அமைப்புகள் மனதில் ஒரு அமைதியற்ற கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். இந்த கொந்தளிப்பான மனநிலை பல விஷயங்களில் தவறான அல்லது அவசரப்பட்ட முடிவை எடுக்கத் தூண்டும் என்பதால் நிதானம் அவசியம். கிரக நிலைகளின் ஆதிக்கத்தை புரிந்து கொண்டு நம் மனதை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டால் துன்பங்களில் இருந்து நாம் எளிதாக விடுபடலாம் என்பதற்காகத்தான் ராசி பலன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க குடும்பம் செழிக்கும். ஞாயிற்றுக்கிழமை நாகப்பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் இடத்தில் விளக்கேற்றி வாருங்கள்.