கும்பம்

9.5.2024 முதல் 15.5.2024 வரை

சாதகங்கள்: இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்த சூரியன், வார இறுதியில் நான்காம் இடத்தில் சென்று குருவோடு இணைந்ததும், குருவின் பார்வை உங்கள் விரய ஸ்தானத்திற்கும் தொழில் ஸ்தானத்திற்கும் ஏற்படுகின்றது. மூன்று பத்துக்கு உரிய செவ்வாய் தன குடும்ப ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்து இருக்கின்றார். பொருளாதார பற்றாக்குறைகள் அகலும். கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. சுக்கிரன் மேஷத்தில் இருப்பதால் ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. புதிய பொருள்களை வாங்கும் யோகமும் உண்டு.

கவனம் தேவை: ராசியில் சனி இருப்பதும் இரண்டாம் இடத்தில் ராகு செவ்வாய் இருப்பதும் அஷ்டமத்தில் கேது இருப்பதும் குரு நான்காம் இடத்தில் இருப்பதும் அடிப்படையில் சில சங்கடங்களை செய்யத்தான் செய்யும். அலைச்சல்களை அதிகப்படுத்தும். ஆரோக்கியம் அவ்வப்பொழுது சுணக்கம் தரும். இடமாற்றங்கள் ஏற்படும். சகோதர கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

பரிகாரம்: அனுமனை வணங்க அனைத்தும் நன்மையாக விளையும். அருகே உள்ள நவக்கிரக சந்நதிக்குச் சென்று 9 முறை வலம் வாருங்கள். நன்மை கிடைக்கும்.