மகரம்

9.5.2024 முதல் 15.5.2024 வரை

சாதகங்கள்: மூன்று பனிரெண்டுக்கு உரிய குரு ஐந்தாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்ப்பதும், அவரோடு அஷ்டமாதிபதி சூரியன் இணைந்திருப்பதும் சிறப்பான அமைப்புகள்தான். பொதுவாகவே சூரியனுக்கு அஷ்டமாதி தோஷம் இல்லை என்றாலும்கூட அவர் சூரியனோடு இணைந்து கூடுதல் பலன் தருவார். ஆரோக்கியம் சீராகும், பொருளாதார பற்றாக்குறை அகலும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தேற வாய்ப்புண்டு. நான்காம் இடத்தில் புதனும், சுக்கிரனும் இணைந்து உங்கள் தொழில் ராசியைப் பார்ப்பதால், கலைஞர்களுக்கு நல்வாய்ப்புண்டு. பத்திரிகை உலகில் உள்ளவர்களுக்கு உத்தியோக முன்னேற்றம் மற்றும் கூடுதல் வருமானங்கள் கிடைக்கும்.

கவனம் தேவை: இரண்டாமிடத்தில் உள்ள ஏழரைச் சனி முழுமையாக விலகவில்லை என்பதால், விட்டகுறை தொட்டகுறையாக சில குடும்பத் தொந்தரவுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதைப் போலவே ஒன்பதாம் இடத்தில் கேது உலவுவதால் தந்தை வழி உறவினர்களோடு சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கருத்து வேறுபாடுகள்
ஏற்படலாம். தந்தையின் உடல் நிலையிலும் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: கணபதியை வணங்க கவலைகள் அகலும். சனிக்கிழமை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வாருங்கள். நல்லது நடக்கும்.