தனுசு

9.5.2024 முதல் 15.5.2024 வரை

சாதகங்கள்: இதுவரை சப்தமஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சூரியன் வார இறுதியில் ஆறாம் இடத்தில் குருவோடு இணைந்து உங்கள் தன ராசியைப் பார்வையிடுகின்றார். மூன்றாம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி மிகச் சிறந்த பலன்களைத் தரும். ஆறில் குரு இருக்கின்றார் என்று கவலைப்பட வேண்டாம். பொதுவாக எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அதற்குள் ஒரு நல்லதும் பொதிந்துதான் இருக்கும். அதைப் போல கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற குரு ஆறில் மறைவது ஒரு விதத்தில் நல்லதுதான். குடும்ப முன்னேற்றம் உண்டு. தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளிநாட்டு பிரயாணங்கள் வெற்றி பெறும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏழுக்குடைய புதன் ஐந்தாம் இடத்தில் சுக்கிரனோடு இணைந்து உங்கள் லாப ராசியை பார்ப்பது மிக நல்ல அமைப்பு.

கவனம்தேவை: பத்தாம் இடத்தில் உள்ள கேது தொழில் தடைகளை ஏற்படுத்தலாம். காரணம், விரயாதிபதி செவ்வாய் அவரை பார்க்கின்றார். நான்காம் இடத்தில் செவ்வாய் ராகு இணைந்து இருக்கின்றார்கள். சகோதர உறவுகள் சிக்கல்களைத் தரலாம்.

சந்திராஷ்டமம்: 13.5.2024 காலை 5.06 முதல் 15.5.2024 பிற்பகல் 3.25 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்:நெய் தீபம் 48 நாட்கள் மாலையில் பூஜை அறையில் ஏற்றுங்கள். மஹான்கள் ஆசிர்வாதம் நல்லது.