கடகம்

2.5.2024 முதல் 8.5.2024 வரை

சாதகங்கள்: கடக ராசிக்காரர்களுக்கு பொதுவாக அஷ்டமச் சனி இருந்தாலும்கூட நீங்கள் புனர்பூசம் அல்லது பூச நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. மூன்றாம் இடத்தில் உள்ள கேதுவும் 10-ம் இடத்தில் உள்ள சுக்கிரனும் பாக்கியஸ்தானத்தில் உள்ள ராகுவும் லாப ஸ்தானத்தில் உள்ள குருவும் கடக ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்புகளைத் தரும். எனவே கடக ராசிக்காரர்கள் மனம் தளராமல் முயற்சி செய்தால் அவர்களது காரியங்கள் நிச்சயம் பலிக்கும். சுக்கிரன் வலுவாக இருப்பதால், கலைஞர்களுக்கு வாய்ப்புகளும் வருமானமும் உண்டு.

கவனம் தேவை: பிரயாணங்களும் அலைச்சலும் அதிகரிக்கும். மூன்றில் கேது இருப்பதாலும் செவ்வாய் அவரைப் பார்ப்பதாலும் சகோதரஸ்தானம் வலு குறைந்து இருப்பதால் சகோதர உறவுகளிடம் கவனம் தேவை. பொதுவாகவே உறவுகளை அனுசரித்து நடந்து கொள்வது கடக ராசிக் காரர்களுக்கு நல்லது. பிரயாணங்களில் கவனம் தேவை. குறிப்பாக வண்டி ஓட்டும் போது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: 2.5.2024 பிற்பகல் 2.33 முதல் 4.5.2024 மாலை 4.38 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: அஷ்டமச் சனி என்பதால் சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமை அனுமன் கோயிலுக்குத் தவறாமல் செல்லுங்கள்.