மிதுனம்

2.5.2024 முதல் 8.5.2024 வரை

சாதகங்கள்:இதுவரை அஷ்டமச் சனி பாதித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது அஷ்டமச் சனி விலகினாலும் 12ல் குரு இருப்பதால், செலவுக்கும் வருமானத்திற்கும் இழுத்துக் கொண்டிருக்கும் என்பதால் வருமானத்தை அதிகரிப்பதிலும், செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பதிலும் கவனம் இருக்க வேண்டும். 11ல் சூரியனும் சுக்கிரனும் இணைந்திருக்கிறார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். சில வாய்ப்புகளை நீங்கள் மெனக்கெட்டுத் தேட வேண்டி இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

கவனம் தேவை: பாக்கியஸ்தானத்தில் சனி அமர்ந்திருக்கிறார். பூர்வ புண்ணிய விஷயங்களில் சிறு தடங்கல் இருப்பதால் நீங்கள் இறைவழிபாட்டையும் முன்னோர்கள் வழிபாட்டையும் முறையாகச் செய்யுங்கள். நான்காம் இடத்தில் கேது அமர்ந்து இருப்பதாலும் செவ்வாய் ராகு கேதுவைப் பார்ப்பதாலும், வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது மிகுந்த கவனத்தோடு இருங்கள். தாயாரின் உடல் நிலையிலும் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 2.5.2024 பிற்பகல் 2.32 வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: அம்பிகையை வழிபட நம்பிக்கை பிறக்கும். வாரந்தோறும் சனிக்கிழமை பைரவருக்கு தீபம் ஏற்றுங்கள். அனைத்தும் நலமாகும்.