ரிஷபம்

9.5.2024 முதல் 15.5.2024 வரை

சாதகங்கள்: தன குடும்ப அதிபதி புதன் சுக்கிரனோடு இணைந்து இருக்கிறார். சூரியன் 12ஆம் இடத்தில் வார இறுதியில் வருகின்றார். தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சனி தொழிலில் புதிய வழிகளைக் காட்டுவார். அதற்கு துணையாக லாப ராகு உங்களுக்கு எதிர்பாராத லாபத்தையும் தருவார். குரு உங்கள் முக்கிய ஸ்தானங்களைப் பார்வையிடுவதால், வீட்டில் சுப காரிய பேச்சுக்கள் பலிதமாகும். இட மாற்றம் நீங்கள் விரும்பியபடி அமையும். கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கவனம் தேவை: விரயத்தில் புதன் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத செலவுகள் அவ்வப்பொழுது வந்து உங்களுக்குத் துன்பத்தைத் தரும். பயணங்கள் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியாது. பொது வாழ்வில் உள்ளவர்கள் சில சிரமங்களைச் சந்திப்பார்கள் கலைத்துறையில் உள்ளவர்கள் கவனமாக இருந்தால்தான் வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். விரயாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் இருப்பதால், தொழிலில் கவனம் தேவை. இல்லாவிட்டால் பத்து ரூபாய் பொருளை 12 ரூபாய் செலவு செய்து வாங்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட மகத்தான நம்பிக்கை பிறக்கும். நல்வாழ்வு கிடைக்கும். செவ்வாய் தோறும் துர்க்கையை வழிபடுங்கள். வாழ்க்கை வளமாகும்.