சாஹோ ரிலீஸ் திடீர் மாற்றம்

2017ல்  பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் தொடங்கப்பட்ட சாஹோ படம், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 30ம் தேதி படம் வெளியாகிறது. சண்டைக் காட்சிகளில் நேர்த்தியை கொண்டு வருவதற்கு இன்னும் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.

எனவேதான் ரிலீஸ் தேதி  மாற்றப்பட்டுள்ளது என்று, படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ்  மஞ்ச்ரேகர், அருண் விஜய், முரளி சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

Related Stories: