மன்னார்குடியில் அரசு ஊழியர் சங்க வட்ட பேரவை கூட்டம்

மன்னார்குடி, செப். 7: மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட பேரவை கூட்டம் வட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. வட்ட இணைச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் செந்தில்ராஜன் வேலை அறிக்கையும், வட்ட பொருளாளர் சுரேஷ் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் லதா, தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் சங்க முன்னாள் மாநில தலைவர் கோவிந்தராஜ், நகராட்சி, மாநகராட்சி சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், மகளிர் துணைக் குழு அமைப்பாளர் தமிழ் சுடர் உள்ளிட்டோர் பேசினர்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சரண்டர் அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதிய வழங்க வேண்டும். சாலை பணியாளர்களு க்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மன்னார்குடியில் அரசு ஊழியர் சங்க வட்ட பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: