பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க அம்பத்தூர், ஒரகடத்தில் துணை மின் நிலையம்: பேரவையில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ேஜாசப் சாமுவேல் (திமுக) பேசுகையில், ‘அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர், ஒரகடம் மற்றும் புதுமேனாம்பேடு பகுதிகளில் சுமார் 87 ஆயிரம் மின் நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களுக்கு சீரான மின்சாரம் வழங்க 110 கேவி கொண்ட புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்,’ என்றார்.இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ‘இந்தாண்டு சீரான மின்வினியோகம் செய்வதற்காக, எந்தெந்த பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது குறித்து துறை வாரியாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டிய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்….

The post பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க அம்பத்தூர், ஒரகடத்தில் துணை மின் நிலையம்: பேரவையில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: