பாகூர் அருகே நெடுஞ்சாலை பணியை தடுத்த அதிமுக பிரமுகர் அதிரடி கைது

பாகூர், ஏப். 29: பாகூர் அருகே சாலை பணியை தடுத்து நிறுத்தி பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணி தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக பாகூர் பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான நிதியும் நீதிமன்றம் மூலம் கொடுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், சோரியாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் வேல்முருகனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், சாலை அமைக்கும் பணிக்கு இடையில் இருந்தது. இதனை அப்புறப்படுத்த வேல்முருகன், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் பெட்ரோல் பங்க்கை அப்புறப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது வேல்முருகன், அவரது ஆதரவாளர் தினகரன் ஆகியோர் சாலை பணியாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், வேல்முருகன் மற்றும் தினகரன் ஆகியோரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். மேலும், இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரி வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.

The post பாகூர் அருகே நெடுஞ்சாலை பணியை தடுத்த அதிமுக பிரமுகர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: