திருவாரூர் அருகே வீரமுத்து நகரில் சேறும் சகதியுமான சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதி

 

திருவாரூர், நவ.26: திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சி வீரமுத்து நகரில் சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலை ஊராட்சி தியானபுரம் வீரமுத்து நகரில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்ற நிலையில் இந்த பகுதிக்கு இதுவரையில் உரிய சாலை வசதி செய்து கொடுக்கப்படாததால் மண்சாலையாகவே இருந்து வருகிறது.

தற்போது மழை காலம் துவங்கி மழை பெய்து வரும் நிலையில் இந்த சாலையானது சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு பயனற்றதாக இருந்து வருவதால் அப்பகுதி மக்கள் இந்த சாலையினை பயன்படுத்த முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் வாகனத்தை இந்த சாலைக்கு முன்பாகவே நிறுத்தி விட்டு நடந்து செல்லும் நிலையில் இருந்து வருகிறது. எனவே இந்த சாலையினை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவாரூர் அருகே வீரமுத்து நகரில் சேறும் சகதியுமான சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: